search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் அமைச்சர் பழனிசாமி"

    நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
     
    ஒகி புயலில் இறந்த, மாயமான 136 மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது, ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளது. 

    விவசாய பயிரிழப்புகளுக்கு ரூ.36 கோடி வழங்கப்பட்டது. குளச்சலில் ரூ.96.2 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், சின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும்.



    தற்போது எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர்.

    எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, விமர்சனங்கள் அனைத்தும் அவர்களுக்கு திரும்ப செல்லும்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மையல்ல. பொய் பேசுவதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அது ஸ்டாலினுக்கே பொருந்தும் என அவர் அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    நாகர்கோவில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று பங்கேற்றனர். #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுமாக காட்சி அளிக்கின்றன.

    விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலின் முன்பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விழா பந்தலின் முகப்பு பகுதியும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.



    விழாவையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரையில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல நாகர்கோவில் நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.

    நூற்றாண்டு விழா நடைபெறும் மைதானத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    சேலம் எடப்பாடியில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
    சேலம்:

    சேலம் எடப்பாடியில் உள்ள தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் முதல் அமைச்சர்  பழனிசாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.  

    அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #NanjundeshwaraTemple
    ×